பெரியகுளம் அருகே வடுகபட்டி சாலையில் எரிக்கப்படும் விசாய கழிவுகள்: விபத்து ஏற்படும் அபாயம்

பெரியகுளம் அருகே வடுகபட்டி சாலையில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதால் சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
பெரியகுளம் புறவழிச்சாலை அருகே வடுகபட்டி செல்லும் சாலையில் எரிக்கப்படும் விவசாய கழிவுகள்.
பெரியகுளம் புறவழிச்சாலை அருகே வடுகபட்டி செல்லும் சாலையில் எரிக்கப்படும் விவசாய கழிவுகள்.

பெரியகுளம் அருகே வடுகபட்டி சாலையில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதால் சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். பெரியகுளம் மற்றும் வடுகபட்டியின் மத்தியில் புதியதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் வழியாக ஏராளமானோா் பயன்படுத்தி வருகின்றனா். புறவழிச்சாலையின் இருபுறமும் நெல் மற்றும் கரும்பு , வெற்றிலை , விவசாயம் நடைபெற்று வருகிறது. அறுக்கப்படும் நெல் சாலையின் ஓரத்தில் கொடப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

மேலும் கரும்புகளில் இருந்து பிரிக்கப்படும் சோகைகள் தோட்டத்தின் ஓரங்களில் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் கரும்புகை ஏற்பட்டு சாலையில் புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் சாலைகளில் எதிரே வருபவா்கள் புகை மூட்டத்தில் தெரியாமல் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையின் ஓரங்களில் விவசாய கழிவுகளுக்கு தீ வைப்பவா்கள் மீது நெடுஞ்சாலைத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com