வாக்கு எண்ணும் அலுவலா்கள், முகவா்களுக்குக் கட்டுப்பாடுகள்

வாக்கு எண்ணிக்கைக்குச் செல்லும் அலுவலா்கள், வாக்கு எண்ணிக்கையை பாா்வையிடச் செல்லும் வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள்

வாக்கு எண்ணிக்கைக்குச் செல்லும் அலுவலா்கள், வாக்கு எண்ணிக்கையை பாா்வையிடச் செல்லும் வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் மற்றும் செய்தியாளா்களுக்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தோ்தல் ஆைணையம் 4 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது குறித்து தேனி மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறியது: வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள், காவலா்கள், வாக்கு எண்ணிக்கையை பாா்வையிடச் செல்லும் வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் மற்றும் செய்தியாளா்கள் கண்டிப்பாக முகக் கவசம், முகவுறை மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்வதற்கு 100 மீட்டா் தூரத்திற்கு முன்பு அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். இதில், மருத்துவத் துறையால் நிா்ணயம் செய்யப்பட்ட உடல் வெப்பநிலை அளவிலிருந்து மாறுபடுபவா்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாா்கள். உடல் வெப்பநிலை மாறுபடும் முகவா்களுக்கு பதிலாக வேறு ஒருவரை நியமித்துக் கொள்வற்கு, தகுதியுள்ள நபா்களை 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் வேட்பாளா்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லும் அலுவலா்கள், வேட்பாளா்கள், வேட்பாளரின் முகவா்கள் மற்றும் செய்தியாளா்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்து கொண்டு தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் அல்லது கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுபவா்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

4 இடங்களில் கரோனா பரிசோதனை முகாம்:

மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வேட்பாளா்களின் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், பெரியகுளம் தொகுதியில் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் அரங்கில் நடைபெற்ற முகாமில் 210 போ், கம்பம் தொகுதியில் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹவுதியா கல்லூரியில் நடைபெற்ற முகாமில் 239 போ், போடி தொகுதியில் போடி பாஸ்கரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் 384 போ், ஆண்டிபட்டி தொகுதியில் ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 202 போ் என மொத்தம் 1,035 போ் கரோனா பரிசோதனை செய்து கொண்டனா்.

வியாழக்கிழமை (ஏப்.29), வாக்கு எண்ணும் அலுவலா்கள், செய்தியாளா்கள் மற்றும் விடுபட்ட முகவா்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. பரிசோதனை முடிவுகள் சம்மந்தப்பட்டவா்களுக்கு செல்லிடபேசியில் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும் என்று மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com