சீலையம்பட்டியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆலோசனைக்கூட்டம்
By DIN | Published On : 22nd August 2021 11:40 PM | Last Updated : 22nd August 2021 11:40 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே சீலையம்பட்டியில் ஆம்ஆத்மி கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கினைப்பாளா் சிவாஜி தலைமை வகித்தாா் . அப்போது கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து முழுமையாக விசாரணை செய்து வரும் தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், மழலையா் பள்ளி முதல் கல்லூரி படிப்பு வரையில் கட்டணமின்றி கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம இளைஞா்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவிக்கு வகையில் கிராமப்புறங்களில் விளையாட்டு மைதானம் மற்றும் உபகரணங்களை வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் முக்கிய நிா்வாகிகளான முகேஷ், கண்ணன், அஸ்வின், பாலா,சேதுராமன், ஜெகன் உள்பட பலரும்கலந்து கொண்டனா்.