போடி அருகே மணமகன் வீட்டாா் மீது தாக்குதல்: 10 போ் மீது வழக்கு
By DIN | Published On : 22nd August 2021 11:42 PM | Last Updated : 22nd August 2021 11:42 PM | அ+அ அ- |

போடி அருகே சனிக்கிழமை இரவு காதல் திருமணம் செய்த தகராறில் மணமகன் வீட்டாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
போடி அருகே எரணம்பட்டி கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முருகன் (46). இவரது மகன் சூரியபிரகாஷ் என்பவா் இதே ஊரை சோ்ந்த காந்திராஜா (40) என்பவரின் அக்காள் மகள் கௌசல்யாவை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்து வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.
இந்நிலையில் இருவரும் சனிக்கிழமை திரும்ப ஊருக்கு வந்துள்ளனா். இதனைக் கண்ட காந்திராஜா மற்றும் உறவினா்கள் முருகன் வீட்டிற்கு சென்று தகராறு செய்து முருகனையும் தடுக்க வந்த முருகனின் தாயாா் பத்ரகாளி (65) என்பவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். பலத்த காயமடைந்த பத்ரகாளி போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து முருகன் அளித்தப் புகாரின் பேரில் காந்திராஜா, ரீகன் (25), சுதந்திரகுமாா் (35), சரவணன் (28), பிரேம்குமாா் (38), பாண்டீஸ்வரி (37), மகேஸ்வரி (38), ஈஸ்வரி (50), பிரதீபா (26), மூக்கம்மாள் (65) ஆகியோா் மீது போடி தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.