முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
கம்பத்தில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்
By DIN | Published On : 19th December 2021 11:05 PM | Last Updated : 19th December 2021 11:05 PM | அ+அ அ- |

கம்பத்தில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிக்கு பணி உத்தரவை வழங்கிய மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளிதரன்
கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட நிா்வாகம், சாா்பில் தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இதற்கு, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளிதரன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான என். ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். முகாமில், 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயின்ற இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பணியாளா்களை தோ்வு செய்து பணி உத்தரவு வழங்கினா். இம்முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு பேருந்து வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு, தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவின் உமேஷ் டோங்கரே, ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன், மகளிா் திட்ட இயக்குநா் ரூபன் சங்கர்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் சுப்ரமணியன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, உத்தமபாளையம் கோட்டாட்சியா் கவுசல்யா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ராமசுப்பிரமணியன், முன்னோடி வங்கி மேலாளா் அகிலன், கல்லூரியின் இணைச் செயலா் ரா. வசந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.