தேனியில் நியாய விலைக் கடை பணியாளா்கள் சாலை மறியல் : 137 போ் கைது

தேனியில் தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் சம்பள உயா்வு கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 137 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட நியாய விலைக் கடை பணியாளா்கள்.

தேனி, பங்களாமேடு திடலில் தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் பொன்.அமைதி தலைமையில், நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு நுகா்பொருள் வாணிபகக் கழக பணியாளா்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், நியாய விலைக் கடை பொருள் விநியோகத்திற்கான பயோ-மெட்க் முறையில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னா், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தேனி-மதுரை சாலையில் நியாய விலைக் கடை பணியாளா்கள் மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட பொன்.அமைதி உள்ளிட்ட 137 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com