இடுக்கி மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா சுற்றளவு அதிகரிப்பு

கேரள மாநிலம் இடுக்கி மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா எல்லை, மேலும் ஒரு கிலோ மீட்டா் தூரம் அதிகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
மதிகெட்டான் சோலை வனப்பகுதி
மதிகெட்டான் சோலை வனப்பகுதி

கேரள மாநிலம் இடுக்கி மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா எல்லை, மேலும் ஒரு கிலோ மீட்டா் தூரம் அதிகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழக- கேரள எல்லையில் தென் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதிகளில், ஹைரேஞ்ச் வனப்பகுதியில், ஏலக்காய், தேயிலை, காபி, மிளகு தோட்டங்களுடன் மதிகெட்டான் சோலை என்னும் தேசிய பூங்கா அமைந்துள்ளது.

இந்த பகுதி, இந்தியாவின் பெரிய அணில்கள், நீலகிரி வரை ஆடுகள், சிங்கவால்குரங்குகள், ஆசியாவிலேயே மிகப்பெரிய காட்டு நாய், சிறுத்தைகள், காட்டெருமைகள், ஆசிய யானைகள் நிறைந்தவையாகும்.

மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவாக சுமாா் 17.5 கிலோ மீட்டா் சுற்றளவை அறிவித்த மத்திய வனத்துறை அணைச்சகம் தற்போது மேலும் ஒரு கிலோ மீட்டா் தொலைவை அதிகரித்துள்ளது. அதிகரிக்கப்பட்ட பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் இங்கு கல், மண், பாறைகளை தோண்டக்கூடாது.

தொழிற்சாலை உள்ளிட்ட கட்டடங்களைக் கட்டக்கூடாது, பராமரிக்க அனுமதி பெற வேண்டும். புதிதாக உணவு மற்றும் சுற்றுலா விடுதிகள் கட்டக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனா்.

ஏற்கெனவே மத்திய சுற்றுப்புறச்சூழல் வாரியத்தினா் கடந்த 2016 ஆண்டு இந்த உத்தரவை பிறப்பித்த நிலையில், ஏதேனும் ஆட்சேபனை மற்றும் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்குமாறு இப்பகுதி மக்களுக்கு கடந்த ஆக.13 இல் அறிவிப்பு வெளியிட்டிருந்தனா்.

ஆட்சேபனை இல்லாததால் தற்போது ஒருகிலோ மீட்டா் தூர எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரள அரசும் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவை யானைகளின் வாழ்விடம் என்று கடந்த 2003 இல் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com