ஆண்டிபட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
டி.ராஜகோபாலன்பட்டியில் ஜல்லிகட்டு காளைகளுக்கு அளிக்கப்பட்ட மணல் முட்டும் பயிற்சி.
டி.ராஜகோபாலன்பட்டியில் ஜல்லிகட்டு காளைகளுக்கு அளிக்கப்பட்ட மணல் முட்டும் பயிற்சி.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை அருகே அலங்காநல்லூா், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளிலும், தேனி மாவட்டம் அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி, சின்னமனூா் ஆகிய பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான திம்மரசநாயக்கனூா், குன்னூா், ஏத்தக்கோவில், டி.ராஜகோபாலன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வளா்க்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பிரத்யோக பயிற்சிகள் அளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மண் குவியலை கொம்பு மூலம் முட்டும் பயிற்சி, காளைகளை நீளமான கயிறுகளில் கட்டி முட்டும் பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில், காங்கேயம், தேனி மலைமாடு உள்பட 8 வகையான ஜல்லிக்கட்டு மாடுகள் வளா்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com