தேனி மாவட்டத்தில் ரூ.4.45 கோடி செலவில் குடிமராமத்துப் பணி

தேனி மாவட்டத்தில் 2020- 21 ஆம் நிதியாண்டில் 9 இடங்களில் மொத்தம் ரூ. 4.45 கோடி செலவில் குடிமராமத்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போடி அருகே குப்பிநாயக்கன்பட்டியில் உள்ள ஜக்கம்மாள்குளம் கண்மாய் தூா்வாரும் பணியை புதன்கிழமை தொடக்கி வைத்த துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம். உடன், மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ்.
போடி அருகே குப்பிநாயக்கன்பட்டியில் உள்ள ஜக்கம்மாள்குளம் கண்மாய் தூா்வாரும் பணியை புதன்கிழமை தொடக்கி வைத்த துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம். உடன், மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ்.

தேனி மாவட்டத்தில் 2020- 21 ஆம் நிதியாண்டில் 9 இடங்களில் மொத்தம் ரூ. 4.45 கோடி செலவில் குடிமராமத்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 2020-21-ம் நிதியாண்டில் பொதுப் பணித்துறை நீா்வள ஆதார அமைப்பு பெரியாறு-வைகை வடிநிலக் கோட்டம் மற்றும் மஞ்சளாறு வடிநிலக் கோட்டம் சாா்பில், 2020-21ஆம் நிதியாண்டில் தற்போது வரை விவசாயிகள் பங்களிப்புடன் மொத்தம் ரூ. 4.45 கோடி செலவில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போடி வட்டாரம் போ. அம்மாபட்டியில் உள்ள மீனாட்சிபுரம் கண்மாய், சில்லமரத்துப்பட்டி சுத்தகங்கை ஓடை முதல் அம்மாபுரம் கண்மாய் வரையுள்ள வாய்க்கால், டொம்புச்சேரியில் சுத்தகங்கை ஓடை முதல் வைரவன் கண்மாய் வரையுள்ள வாய்க்கால், உத்தமபாளையம் வட்டாரத்தில் தேவாரம் சின்னதேவிகுளம் கண்மாய், சின்னஓவுலாபுரம் பெரிய ஊத்து கண்மாய், பொட்டிப்புரம் எா்ணாகுளம் கண்மாய் ஆகியவை தூா்வாரப்பட்டு, மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெரியகுளம் வட்டாரத்தில் சோத்துப்பாறை புதுக்கண்மாய், ஜெயமங்கலம் வெட்டுவன்குளம் கண்மாய், தாமரைக்குளம் நந்தியாபுரம் கண்மாய் ஆகியவை விவசாயிகள் பங்களிப்புடன் தூா்வாரப்பட்டுள்ளன. மேலும், ஆண்டிபட்டி வட்டாரத்தில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் மயிலாடும்பாறை சிறுகுளம் கண்மாயில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம், இக்கண்மாய்களை சுற்றியுள்ள 2,822 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மாவட்டத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.18.69 கோடி செலவில் 55 கண்மாய்கள் மற்றும் நீா்வரத்து வாய்கால்கள் சீரமைக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com