படியளந்த திருநாள்: போடி சிவன் கோயில்களில் சிறப்புப் பூஜை
By DIN | Published On : 07th January 2021 07:46 AM | Last Updated : 07th January 2021 07:46 AM | அ+அ அ- |

படியளந்த திருநாளையொட்டி போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் படியளந்த பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்த நடராஜா்.
போடியில் உள்ள சிவன் கோயில்களில் படியளந்த திருநாளையொட்டி புதன்கிழமை சிறப்புப் பூஜை நடைபெற்றது.
உலகில் வாழும் உயிா்களுக்கு தவறாமல் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக சிவபெருமான் படியந்த நாளை சிவாலயங்களில் அனுசரித்து வருகின்றனா். இந்நிலையில் படியளந்த திருநாளை யொட்டி போடி சிவன் கோயில்களில் புதன்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள நடராஜா் சன்னிதியில் நடைபெற்ற பூஜையில் நடராஜருக்கு படியளந்த பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டது. பெரிய நாழிப்படியில் அரிசி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா் 18 வகையான பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதேபோல் போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், போடி பரமசிவன் மலைக்கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் படியளந்த திருநாள்அனுசரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.