பெரியகுளம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
By DIN | Published On : 07th January 2021 07:41 AM | Last Updated : 07th January 2021 07:41 AM | அ+அ அ- |

பெரியகுளம் அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தைச் சோ்ந்த முத்துச்சாமி மகள் நந்தினி (29). இவருக்கும், கள்ளிப்பட்டியைச் சோ்ந்த முத்துச்சாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நந்தினி மனமுடைந்து காணப்பட்டாராம். கடந்த டிச. 29 ஆம் தேதி நந்தினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நந்தினி செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.