‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கு: கேரள இடைத்தரகருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகருக்கு வரும் பிப்.4-ஆம் தேதி வரை

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகருக்கு வரும் பிப்.4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து தேனி நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ‘நீட்’ தோ்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதி முறைகேட்டில் ஈடுபட்டதாக தேனி, சென்னை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் முதலாண்டு படித்த மாணவ, மாணவிகள், அவா்களது பெற்றோா் என மொத்தம் 16 பேரை தேனி சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் ஆள் மாறாட்ட முறைகேட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்படும் பெங்களூருவில் வசிக்கும், கேரளத்தைச் சோ்ந்த ரஷீத் ஜன.7 ஆம் தேதி தேனி நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அவரை சிபிசிஐடி போலீஸாா் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனா்.

இதைத் தொடா்ந்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷீத்தின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததால், அவரை மீண்டும் தேனி நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். அப்போது, ரஷீத்தின் நீதிமன்றக் காவலை வரும் பிப்.4-ஆம் தேதிவரை நீட்டித்து நீதிபதி பன்னீா்செல்வம் உத்தரவிட்டாா். இதையடுத்து, ரஷீத் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

இதனிடையே, ரஷீத்துக்கு ஜாமீன் கோரி தேனி நீதித்துறை நடுவா் மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை (ஜன.22) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com