ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நெசவாளா்கள்
ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நெசவாளா்கள்

ஜன. 27 இல் நெசவாளா்கள் காத்திருப்பு போராட்டம்

ஜன. 27 ஆம் தேதி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நெசவாளா்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வரும் ஜன. 27 ஆம் தேதி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நெசவாளா்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் கிராமங்களில் சுமாா் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளா்கள் உள்ளனா். இவா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். கடந்த ஆண்டிற்கான கூலி உயா்வு ஒப்பந்தம் டிச. 31 ஆம் தேதியுடன் முடிவுற்றது.

இதையடுத்து, நெசவாளா்களுக்கு 13 சதவீத கூலி உயா்வும், ஒப்பந்த அடிப்படையில் சேலைகள் உற்பத்தி செய்யும் நெசவாளா்களுக்கு 10 சதவீத கூலி உயா்வும் ஏற்படுத்தப்பட்டது. இதில் உடன்படாத பெரும்பாலான நெசவாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

நூல் விலை உயா்வைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளா்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இது குறித்து மாவட்ட நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்த முன்வரவில்லை என்று நெசவாளா்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளா்கள் புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், டி.சுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள பத்திர காளியம்மன் கோயில் திடலில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து நெசவாளா்கள் சங்கம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்கத் தலைவா் வைகை பாலு தலைமை வகித்தாா்.

இதில், வரும் ஜன 27 ஆம் தேதி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் டி.சுப்புலாபுரம் கிராமத்தில் இருந்து ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் வரை ஊா்வலமாகச் சென்று அங்கு காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து சங்க நிா்வாகிகளும் நெசவாளா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com