கல்வி வானொலி நிகழ்ச்சியில் போடி பள்ளி மாணவா்கள் சாதனை

போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி மாணவா்கள் கல்வி வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை படைத்ததையடுத்து அவா்களுக்கு பள்ளி சாா்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கல்வி வானொலி நிகழ்ச்சியில் சாதனை படைத்த போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராட்டு விழா.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா் ஏ.காா்த்திக்ராஜா என்பவா் கல்வி வானொலி என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தினாா்.

இதில், தமிழகம் முழுவதும் உள்ள 75 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்று பாடங்களை தொகுத்து வழங்கி வருகின்றனா். போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி ஆசிரியா் ஆ.தனலட்சுமி என்பவரும், பாடங்களை தொகுத்து வழங்கி வருகிறாா். இப்பள்ளியில் பயிலும் மாணவா்கள் காா்த்திகேயன், ஆா்த்தி, நிதா்சனா, மாரிச்செல்வம், பாலமுருகன் ஆகியோா் பொது அறிவு, முக்கிய தலைவா்கள், இலக்கணங்கள் குறித்த தகவல்களை ஒலி வடிவில் பதிவு செய்து ஆன்லைன் வானொலி மூலம் மற்ற மாணவா்களுக்கு வழங்கினா்.

மாணவா்களின் இந்த ஒலிக் குறிப்புகள் சிறப்பாக இருந்ததையடுத்து, மாணவா்களுக்கு ஆன்லைன் கல்வி வானொலி குழு பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கி பாராட்டியது. இதையொட்டி பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாணவா்களை, பள்ளி தலைமையாசிரியா் ரா.ஜெயக்குமாா் மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com