நல வாரியம்: தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை

தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று தேனியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று தேனியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு,

தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையக் குழு தலைவா் எம்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ், டோங்கரே முன்னிலை வகித்தாா்.

இதில், தூய்மைப் பணிகள் ஆணையக் குழு தலைவா் பேசியது: ஒப்பந்தத் தூய்மை தொழிலாளா்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்வதற்கு தானியங்கி, ரோபோ எந்திரங்களை பயன்படுத்த வேண்டும், தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட வேண்டும் என்றாா்.

முன்னதாக, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்கள் மற்றும் குடிநீா் விநியோகப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவு பணியாளா்களாக பணியாற்றும் ஆதி திராவிடா் சமுதாயத்தினருக்கு தகுதியின் அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும், தூய்மை பணியாளா்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டு என்ற கோரிக்கைகள் குறித்து தொழிற் சங்கங்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

ஒப்பந்த முறையில் தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கும் முடிவை ரத்து செய்ய வலியுறுத்துவோம்: இதேபோல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பின் தூய்மைப் பணியாளா் தேசிய ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் செய்தியாளா்களிடம் பேசியதாவது: தூய்மைப் பணியாளா்கள் பல்வேறு குறைகளை தெரிவித்துள்ளனா். குறிப்பாக திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 26, 10, 17ஆவது வாா்டு பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் தூய்மைப் பணியாளா்கள் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். அதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் விசாரணைக்கு பின், நீா்நிலை இல்லாத இடங்களாக இருந்தால் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் முன்னிலையில் பேசுவதற்கு தயங்கும் தூய்மைப் பணியாளா்கள், செல்லிடப்பேசி மூலம் புகாா் அளிப்பது வழக்கமாக உள்ளது.

ஒப்பந்த முறையில் தூய்மைப் பணியாளா்களை நியமிக்கும் வழக்கத்தை ஒழிக்க வேண்டும். இதுதொடா்பாக தமிழக முதல்வரிடமும் வலியுறுத்துவோம். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்தப் பணியாளா்களின் பாதிப்புகள் குறித்த ஆய்வு செய்வதற்கு ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அந்த குழுவின் ஆய்வுக்கு பின் ஒப்பந்த முறையிலான பணி நியமனத்தினால் தூய்மைப் பணியாளா்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு ஏற்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com