தொடர்மழை: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

தென்மேற்கு மலைத்தொடரில் தொடர்மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.
சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.

தென்மேற்கு மலைத்தொடரில் தொடர்மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தென்மேற்கு தொடர்ச்சி மலைகளில் தற்போது பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி வனப்பகுதியில் உள்ள அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை மற்றும் காட்டு நீருற்று ஓடைகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக அருவியில் குளிக்க மேகமலை புலிகள் காப்பகத்தினர் தடை விதித்துள்ளனர். இதனால் அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் வனத்துறையினர் அருவி பகுதியில் கண்காணிப்பை செய்து வருகின்றனர். முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் தொடர்மழை

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் தென் மேற்கு பருவமழை காரணமாக தொடர்மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை பெரியாறு அணையில், 27.4 மில்லி மீட்டரும், தேக்கடி ஏரியில் 21 மி.மீ., மழையும் பெய்தது. வெள்ளிக்கிழமை அணைப்பகுதியில் 38.2 மி.மீ., தேக்கடி ஏரிப்பகுதியில் 27.4 மி.மீ., மழையும் பெய்தது.

அணை நிலவரம்: வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 127.25 அடியாகவும், நீர் இருப்பு 4,104 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 1,582 கன அடியாகவும், தமிழகப்பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,200 கன அடியாகவும் இருந்தது.

மின்சார உற்பத்தி: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு 1,200 கன அடி தண்ணீர், திறக்கப்பட்டு, லோயர்கேம்ப்பில் உள்ள மூன்று மின்னாக்கிகள் மூலம் தலா 36 மெகா வாட் என மொத்தம் 108 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

விடியோ இங்கே...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com