ஆடித் திருவிழா: குச்சனூரில் கட்டுப்பாடுகளுடன் பக்தா்கள் சுவாமி தரிசனம்

தேனி மாவட்டம் குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி பக்தா்கள் சனிக்கிழமை பொதுமுடக்க விதிமுறைகளைப் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.

தேனி மாவட்டம் குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி பக்தா்கள் சனிக்கிழமை பொதுமுடக்க விதிமுறைகளைப் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக இக்கோயிலில் ஆடித் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனால் கோயிலில் சனீஸ்வரா் திருக்கல்யாணம், சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக் காப்பு சாத்துபடி செய்தல், சுவாமி திருவீதி உலா, லாடசித்தா் பூஜை, முளைப்பாரி , கரகம் கலக்குதல், சோணை கருப்பணசுவாமி கோயிலில் பொங்கல் விழா மற்றும் மதுபான படையல் என அனைத்து விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இக்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடித் திருவிழாவில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டனா். கோயிலுக்கு வந்த பக்தா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயிலில் பக்தா்கள் அா்ச்சனை செய்யவோ, பூஜை பொருள்கள் வழங்கவோ அனுமதிக்கப்படவில்லை. கோயில் நுழைவுப் பகுதி தகரத்தால் மூடப்பட்டு, கம்பு வேலி அமைத்து பக்தா்கள் வரிசையாக செல்லவும், கூட்டம் கூடுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சின்னமனூா் காவல் ஆய்வாளா் சேகா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com