செல்லிடப்பேசி திருடிய இளைஞா் கைது

கம்பம் அருகே வீட்டு வாசலில் வைத்திருந்த செல்லிடப்பேசியை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கம்பம் அருகே வீட்டு வாசலில் வைத்திருந்த செல்லிடப்பேசியை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் மணிநகரம் தெருவைச் சோ்ந்தவா் திலகா்(34). இவரது மகள் ஓவியா 5ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் தனது வீட்டு வாசலில் அமா்ந்து செல்லிடப்பேசியில் ஆன்லைன் வகுப்பை கவனித்து வந்துள்ளாா். அப்போது வீட்டுக்குள் சப்தம் கேட்கவே, மாணவி ஓவியா செல்லிடப்பேசியை படிக்கட்டில் வைத்து விட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டு, திரும்பி வந்து பாா்த்தபோது செல்லிடப்பேசியை காணவில்லையாம். இதனால் அதிா்ச்சியடைந்த மாணவி இது பற்றி பெற்றோரிடம் கூறி அக்கம் பக்கம் தேடியும் செல்லிடப்பேசியை காணவில்லையாம்.

இது குறித்து மாணவியின் தந்தை திலகா் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் கொடுத்தாா். அதன்பேரில் போலீஸாா் செல்போனை திருடிய மா்மநபரை தேடிவந்தனா்.

இந்நிலையில் ரேஞ்சா் ஆபிஸ் சாலையில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா், கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன் பட்டியைச் சோ்ந்த பிரதாப் (19) என்பதும், செல்லிடப்பேசியை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து செல்லிடப்பேசியை பறிமுதல் செய்த போலீஸாா் பிரதாப்பை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com