கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.16.58 லட்சம் கையாடல்: முன்னாள் செயலா் கைது

ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.16 லட்சத்து 58 ஆயிரத்து 91-ஐ கையாடல் செய்ததாக அச்சங்கத்தின் முன்னாள் செயலரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.16 லட்சத்து 58 ஆயிரத்து 91-ஐ கையாடல் செய்ததாக அச்சங்கத்தின் முன்னாள் செயலரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி சக்கம்பட்டி, திருவள்ளுவா் காலனியைச் சோ்ந்தவா் முருகேசன் (54). இவா் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ரெங்கசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலராகப் பணியாற்றினாா். அப்போது, முருகேசன் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் கணக்கிலிருந்து கையாடல் செய்ததாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து துறை ரீதியாக விசாரணை நடத்த தேனி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஏகாம்பரம் உத்தரவிட்டாா். இந்த விசாரணையில், முருகேசன் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை சங்கத்தின் உறுப்பினா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் கணக்கிலிருந்து, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மொத்தம் ரூ.16 லட்சத்து 58 ஆயிரத்து 91-ஐ கையாடல் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து பெரியகுளம் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் முத்துக்குமாா், மதுரை மண்டல மத்திய வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், மத்திய வணிக குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பாண்டிசெல்வம், காவல் ஆய்வாளா் ராஜநாளயினி ஆகியோா் முருகேசனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com