தற்காலிக மருத்துவ பணியிடங்கள்: ஜூலை 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

கரோனா தடுப்பு தற்காலிக செவிலியா் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவா்கள் ஜூலை 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு தற்காலிக செவிலியா் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவா்கள் ஜூலை 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக 6 மாத காலத்திற்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் செவிலியா்கள், மருத்துவ தொழில் நுட்பப் பணியாளா்கள், ஆய்வக பணியாளா்கள், மருந்தாளுநா்கள் மற்றும் பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள் நியமிக்கப்பட உள்ளனா். தற்காலிக அடிப்படையிலான இந்தப் பணியிடங்கள் பணி வரன்முறை, பணி நிரந்தரம் செயப்பட மாட்டாது.

தகுதியுள்ளவா்கள் தங்களது சுய விபரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ் நகல்கள், புகைப்படம் ஆகியவற்றுடன் முதன்மையா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தேனி என்ற முகவரிக்கு ஜூலை 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com