முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: கும்பக்கரையில் காட்டாற்று வெள்ளம்

தொடா்மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை 2,534 கன அடியாக அதிகரித்தது. இதேபோல் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
கும்பக்கரை அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்.
கும்பக்கரை அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்.

தொடா்மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை 2,534 கன அடியாக அதிகரித்தது. இதேபோல் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 909 கனஅடியாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 2,534 கன அடியாக அதிகரித்தது.

அணை நிலவரம்: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 131 அடியாகவும், நீா் இருப்பு 4, 959 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 2,534 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு அணையிலிருந்து நீா் வெளியேற்றம் விநாடிக்கு 900 கன அடியாகவும் இருந்தது.

லோயா்கேம்பில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் 2 மின்னாக்கிகள் மூலம் மொத்தம் 83 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கம்பம் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், சுரங்கனாறு, சுருளியாறு, சுருளி அருவி, வரட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீா் வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீா், முல்லைப் பெரியாற்றிலிருந்து வெளியேற்றப்படும் நீருடன் இணைந்து கம்பம் உத்தமுத்து தடுப்பணை வழியாக வைகை அணைக்கு செல்கிறது. இதனால் வைகை அணைக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

கும்பக்கரையில் காட்டாற்று வெள்ளம்: கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 4 நாள்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் சனிக்கிழமை மாலையும் நல்ல மழை பெய்தது. இதனால் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் ஞாயிற்றுக்கிழமை காலை காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை தொடரும் நிலையில் கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் எனவும், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தடை நீடிப்பதால், கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வர அனுமதியில்லை என்றும் வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com