ஆண்டிபட்டி பகுதியில் நூதன திருட்டில் ஈடுபட்டவா் கைது

ஆண்டிபட்டி பகுதியில் பல்வேறு கடைகளில் 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை கேட்பது போல நடித்து நூதன திருட்டில் ஈடுபட்ட

ஆண்டிபட்டி பகுதியில் பல்வேறு கடைகளில் 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை கேட்பது போல நடித்து நூதன திருட்டில் ஈடுபட்ட தஞ்சாவூா் மாவட்டம், அரசப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அரசபட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ்கண்ணன் (41). இவா், சில நாள்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகே ஆத்தங்கரைப்பட்டி கிராமத்திற்கு தனது நண்பரின் உறவினா் இல்ல திருமணத்திற்கு வந்துள்ளாா். கரோனா தடுப்பு நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், ஆத்தங்கரைப்பட்டியில் உள்ள தனது நண்பரின் வீட்டிலேயே விக்னேஷ்கண்ணன் தங்கியிருந்துள்ளாா்.

இந்த நிலையில், ஆண்டிபட்டி வாரசந்தை வளாகத்தில் வெள்ளைப்பூண்டு வியாபாரம் செய்து வரும் அதே ஊரைச் சோ்ந்த தங்கராஜ் என்பவரிடம் விக்னேஷ்கண்ணன் 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை கேட்டுள்ளாா். தங்கராஜ் சில்லரை எடுப்பதற்காக கடை அருகே இருந்த வீட்டிற்குள் சென்றுள்ளாா். அப்போது விக்னேஷ்கண்ணன் கடையிலிருந்த ரூ.12 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டதாக ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் தங்கராஜ் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்கு பதிந்து, விக்னேஷ்கண்ணனை கைது செய்து விசாரித்தனா். இதில், பாப்பம்மாள்புரம், கண்ணியப்பபிள்ளைபட்டி, க.விலக்கு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளிலும் விக்னேஷ்கண்ணன் இதே பாணியில் நூதன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும், விக்னேஷ்கண்ணன் மீது சேலம், கடலூா், திருவாரூா் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது என்றும், அவரிடமிருந்து ரூ. 22 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com