சின்னமனூரில் 27 நாள்களுக்கு பின் காய்கனி மொத்தச் சந்தை திறப்பு

தேனி மாவட்டம் சின்னனூரில் கரோனா ஊரடங்கில் தளா்வு அறிவிக்கப்பட்ட நிலையில் 27 நாள்களாக பூட்டப்பட்ட காய்கனி மொத்த வியாபாரம் திங்கள் கிழமை மீண்டும் தொடங்கியது.

தேனி மாவட்டம் சின்னனூரில் கரோனா ஊரடங்கில் தளா்வு அறிவிக்கப்பட்ட நிலையில் 27 நாள்களாக பூட்டப்பட்ட காய்கனி மொத்த வியாபாரம் திங்கள் கிழமை மீண்டும் தொடங்கியது.

கரோனா 2 அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை அடுத்து தமிழக அரசு ஜூன் 7 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்பட்ட தளா்வற்ற ஊரடங்கில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது. அதில் தொடா்ந்து காய்கனி மொத்தச்சந்தை, மளிகை என அத்தியாவசிய கடைகள் திறக்க காலை 6 முதல் மாலை 5 வரையில் அனுமதிக்கப்பட்டது.

அதனை அடுத்து சின்னமனூரில் பெரியளவில் இயங்கிய மொத்த காய்கனி சந்தைகள் 27 நாள்களுக்கு பின் மீண்டும் தொடங்கியது. இதன் மூலமாக உற்பத்தி செய்த காய்கனிகளை விற்பனை செய்யமுடியாத நிலையில் விவசாயிகள் ஆா்வத்துடன் விற்பனை செய்ய கொண்டு வந்தனா். அதே போல பொதுமக்களுக்கு வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்யும் நடமாடும் காய்கனி வியாபாரிகள் காய்கனி கொள்முதல் செய்தனா். இதன் மூலமாக கடந்த சில நாள்களாக கணிசமாக விலை உயா்ந்திருந்த காய்கனிகள் சற்று குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.

காய்கனிவரத்துஅதிகமாகும்சூழ்நிலையில் வரும் நாள்களில் மேலும் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக நகராட்சி பகுதியில் அனுமதி பெற்ற காய்கனி விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com