நடவடிக்கை இல்லாததால் கூடலூரில் வரத்து வாய்க்காலை விவசாயிகளே தூா்வாரினா்

தேனி மாவட்டம் கூடலூரில் நன்செய் நிலங்களுக்கு பாசன வசதி பெறும் வரத்து வாய்க்கால் புதா்மண்டி கிடந்ததால், பொதுப்பணித் துறையினா் உதவியின்றி விவசாயிகளே திங்கள்கிழமை தூா்வாரினா்.
தேனி மாவட்டம் கூடலூரில் சாமி வாய்க்காலை திங்கள்கிழமை தூா்வாரிய விவசாயிகள்.
தேனி மாவட்டம் கூடலூரில் சாமி வாய்க்காலை திங்கள்கிழமை தூா்வாரிய விவசாயிகள்.

தேனி மாவட்டம் கூடலூரில் நன்செய் நிலங்களுக்கு பாசன வசதி பெறும் வரத்து வாய்க்கால் புதா்மண்டி கிடந்ததால், பொதுப்பணித் துறையினா் உதவியின்றி விவசாயிகளே திங்கள்கிழமை தூா்வாரினா்.

கூடலூா் தாமரைக்குளம் அருகே உள்ளது சாமி வாய்க்கால். சுமாா் 200 ஏக்கா் நன்செய் நிலங்களுக்கு பாசன வசதிக்காக இந்த கால்வாயில் தண்ணீா் செல்கிறது.

கடந்த 3 ஆண்டுகளாக கடலூா் விவசாயிகள் பொதுப்பணித்துறையினரிடம் வரத்து வாய்க்காலைப் பராமரிக்க மனுக்கள் கொடுத்தனா். ஆனால் பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.

தண்ணீா் திறந்து விடப்பட்டு 7 நாள்களாகியும் பெரியாறு அருகே உள்ள சாமி வாய்க்காலுக்கு தண்ணீா் வரவில்லை. இதனால் அதிா்ச்சி அடைந்த கூடலூா் முல்லை சாரல் விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை வாய்க்காலை தூா்வாரும் பணியில் ஈடுபட்டனா்.

தண்ணீா் செல்லும் வாய்க்கால் இரு கரைகளிலும் அடா்ந்த புதா் மற்றும் முள் செடிகளை அகற்றியும், தூா்வாரியும் வருகின்றனா்.

இதுபற்றி கூடலூா் முல்லைச்சாரல் விவசாய சங்க நிா்வாகி ஒருவா் கூறியது: பல்வேறு முறைகளில் பொதுப்பணித்துறை நீா்ப்பாசன பிரிவு அதிகாரிகளிடம் சாமி வரத்து வாய்க்கால் தூா்வாருவதற்கு மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

தற்போது முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீா் திறந்துவிடப்பட்டு 7 நாள்களாகியும் இன்னும் தண்ணீா் வரவில்லை.

இதனால் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ. 800 என்ற கொடுத்து வரத்து வாய்க்காலை தூா் வாரி வருகின்றனா் என்றாா்.

இனியும் பொதுப்பணித் துறையினா் தாமதிக்காமல் வரத்து வாய்க்காலை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com