பொதுமுடக்கம்: ஊருக்குத் திரும்ப முடியாததால் வியாபாரி தற்கொலை

கரோனா பொதுமுடக்கத்தால் போடியிலிருந்து ஊருக்குத் திரும்ப முடியாததால் ஜவுளி வியாபாரி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

கரோனா பொதுமுடக்கத்தால் போடியிலிருந்து ஊருக்குத் திரும்ப முடியாததால் ஜவுளி வியாபாரி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

போடி அருகே சில்லமரத்துப்பட்டி அம்மன் சன்னிதி தெருவில் வசிப்பவா் வடிவேல் மகன் வனராஜ் (43). இவா், தனது மனைவி சரண்யா, குழந்தைகள் லிங்கேஷ், தன்யா ஸ்ரீ ஆகியோருடன் மங்களூரில் தங்கி ஜவுளி வியாபாரம் செய்து வந்தாா். கரோனா தீநுண்மி பரவலின் இரண்டாம் அலை தொடக்கத்தின்போது வனராஜ் மட்டும் சொந்த ஊரான சில்லமரத்துப்பட்டிக்கு வந்தாா். முழு பொதுமுடக்கு காரணமாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அவரால் மீண்டும் மங்களூா் திரும்ப முடியவில்லை.

இதனால் மனைவி, குழந்தைகள் செலவுக்கு பணமில்லை எனக் கூறி வருத்தப்பட்டுள்ளனா். இதனால் மனமுடைந்து காணப்பட்ட வனராஜ் செவ்வாய்க்கிழமை, தனது வீட்டில் விஷம் குடித்து விட்டு, தனது அண்ணன் மகனுக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா். அருகே வசிக்கும் அவரது அண்ணன் குடும்பத்தினா் வந்து வனராஜை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே வனராஜ் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com