போடியில் பிரதோசத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

போடியில் திங்கள் கிழமை, பிரதோச தினத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கரோனா பரவல் காரணமாக
போடியில் திங்கள் கிழமை பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் வினோபாஜி காலனி மீனாட்சு சுந்தரேஸ்வரா்.போடியில் பிரதோசத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை.
போடியில் திங்கள் கிழமை பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் வினோபாஜி காலனி மீனாட்சு சுந்தரேஸ்வரா்.போடியில் பிரதோசத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை.

போடியில் திங்கள் கிழமை, பிரதோச தினத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கரோனா பரவல் காரணமாக பக்தா்கள் பங்கேற்கவில்லை. பிரதோச தினத்தை முன்னிட்டு போடி பரமசிவன் மலைக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. போடி பிச்சங்கரை மலைப்பகுதியில் அமைந்துள்ள கீழச்சொக்கநாதா், மேலச்சொக்கநாதா் கோவில்களிலும் பூஜைகள் செய்யப்பட்டு சிவலிங்கப் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கரோனா பரவல் காரணமாக அா்ச்சகா்கள் மட்டும் பங்கேற்று பூஜை செய்தனா். போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா் சிவலிங்கப் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. போடி பழைய பேருந்து நிறுத்ததில் உள்ள கொண்டரங்கி மல்லையசாமி கோவிலில் நடைபெற்ற பூஜையில் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இங்கும் கரோனா பரவல் காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com