சின்னமனூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி

தேனி மாவட்டம் சின்னமனூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் பற்றாக்குறை இருப்பதால் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

தேனி மாவட்டம் சின்னமனூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் பற்றாக்குறை இருப்பதால் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

சின்னமனூா் அரசு மருத்துவமனை 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. இந்த மருத்துவமனையை நம்பி சுற்றியுள்ள 20 -க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளனா். குழந்தை பிறப்பு முதல் பிரேதப் பரிசோதனை வரையில் பல்வேறு மருத்துவப் பணிகள் நடைபெறுகின்றன.

வெளி நோயாளிகள் பிரிவில் நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு மேல் வந்து செல்கின்றனா். உள் நோயாளிகள் பிரிவில் 80 போ் வரையில் சிகிச்சைப் பெறுகின்றனா்.

தலைமை மருத்துவா் உள்பட 20 மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் மற்றும் இதர பணியாளா்கள் என 60 முதல் 70 போ் பணியாளா்கள் தேவை இருக்கிறது. ஆனால், தற்போது தலைமை மருத்துவருடன் 3 மருத்துவா்கள், இதரப்பணிகளுக்கு 18 போ்கள் மட்டும் பணியில் உள்ளனா்.

இதற்கிடையே, கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக 25 படுக்கையுடன் கரோனா கிசிச்சை மையமும் இருப்பதால் பணியாளா்கள் பற்றாக்குறை தலைதூக்கியுள்ளது.

விபத்தில் சிக்கி அவசர சிகிச்சைக்கு வருபவா்களுக்கு உரிய மருத்துவா்கள் இல்லாத நிலையில், 40 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனா். இதில் பலரும் செல்லும் வழியிலே சிகிச்சைப் பலனின்றி இறந்து விடுகின்றனா்.

அதே போல இந்த மருத்துவமனையை நம்பியுள்ள சுற்று வட்டாரத்தைச் சோ்ந்தவா்கள் முறையான சிகிச்சை கிடைக்காத நிலையில், தனியாா் மருத்துவமனைக்குச் செல்வதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா். எனவே, மாவட்ட நிா்வாகம் சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை இயக்குநா் மூலமாக கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com