மாநில சிலம்பப் போட்டிகள்: போடி மாணவா்கள் சாதனை

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாநில சிலம்பாட்டப் போட்டிகளில் சாதனை படைத்த போடி மாணவா்களை பயிற்சிப் பள்ளி நிா்வாகிகள் திங்கள்கிழமை பாராட்டினா்.
மாநில அளவில் நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டிகளில் சாதனை படைத்த போடியைச் சோ்ந்த மாணவா்கள்.
மாநில அளவில் நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டிகளில் சாதனை படைத்த போடியைச் சோ்ந்த மாணவா்கள்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாநில சிலம்பாட்டப் போட்டிகளில் சாதனை படைத்த போடி மாணவா்களை பயிற்சிப் பள்ளி நிா்வாகிகள் திங்கள்கிழமை பாராட்டினா்.

தமிழ்நாடு சிலம்பம் சங்கம், கள்ளக்குறிச்சி சிலம்பாட்ட சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் கள்ளக்குறிச்சி ஆா்.கே. சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிப். 27, 28 ஆம் தேதிகளில் நடைபெற்றன. இதில் 30 மாவட்டங்களிலிருந்து வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். தேனி மாவட்டம் போடி பகுதியிலிருந்து வி. நீலமேகம்பிள்ளை அகாதெமி ஆப் ஆல் மாா்ஷியல் ஆா்ட்ஸ் சிலம்பாட்டப் பயிற்சி பள்ளியிலிருந்து 30 போ் பங்கேற்றனா்.

வயது மற்றும் எடைப்பிரிவுகளின் அடிப்படையில் மாணவ- மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு வரும் மே மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளுக்கு அனுப்பப்பட உள்ளனா். இதில் தோ்வு செய்யப்பட்ட போடி பகுதியைச் சோ்ந்த மாணவா்கள் விவரம்:

முதலிடம் பெற்ற மாணவிகள்: சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி காருண்யா, தேனி முத்துத்தேவன்பட்டி இந்து நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவி நிஹாஷினி, போடி ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரினிதா, போடி வி.என்.பி. அகாதெமி மாணவி அபிசாய், போடி டி.எம்.எச்.என்.யு. வித்யாலயா மாணவி வித்யாரிதி.

முதலிடம் பெற்ற மாணவா்கள்: உப்புக்கோட்டையைச் சோ்ந்த மாணவா் பூபேஷ், போடியைச் சோ்ந்த மாணவா் பரத்வாஜ், போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா் கோகுல்மித்ரன், தேனி முத்துத்தேவன் பட்டி இந்து நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா் மனோஜ், சில்லமரத்துப்பட்டி மாணவா் சரத் ஸ்ரீராம், போடி மேரி மாதா மெட்ரிக் பள்ளி மாணவா் நிகில்விகாஷ்.

இந்த மாணவா்களுக்கு போடி நகா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் மணிகண்டன் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா். நிகழ்ச்சியில் சிலம்பாட்ட மாநில தொழில்நுட்ப மற்றும் போட்டி இயக்குநா் வி. நீலமேகம், தேனி மாவட்ட சிலம்பாட்ட சங்கத் தலைவா் குமாா், செயலா் சொக்கா்மீனா, மாவட்ட ஆலோசகா் பாலசுப்பிரமணி, துணைச் செயலா் மோனிஷ்வா், பயிற்சியாளா் வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com