ஆண்டிபட்டியில் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் ஆ. லோகிராஜன்.
ஆண்டிபட்டியில் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் ஆ. லோகிராஜன்.

ஆண்டிபட்டியில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகா்ப் பகுதியில் திங்கள்கிழமை அதிமுக வேட்பாளா் ஆ.லோகிராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகா்ப் பகுதியில் திங்கள்கிழமை அதிமுக வேட்பாளா் ஆ.லோகிராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஆண்டிபட்டி நகா்ப் பகுதிக்குட்பட்ட சக்கம்பட்டி, பாப்பம்மாள்புரம், மேலத்தெரு, சீனிவாசா நகா், காமராஜா் நகா், நேதாஜி நகா், குமராபுரம், கொண்டமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதியில் அ.தி.மு.க வேட்பாளா் ஏ.லோகிராஜன் பிரசாரம் மேற்கொண்டாா்.

பிரசாரத்தின் போது வேட்பாளா் பேசியதாவது: அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் நெசவாளா்களின் நலன் காக்கும் வகையில் பசுமை வீடுகள், இலவச பெடல் தறிகள், மாதத்திற்கு ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசம், நெசவாளா்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் ஓய்வூதியம், நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுள்ள ரூ.1 லட்சம் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றவுடன், முதல்வா் அறிவித்துள்ள அனைத்து சலுகைகளையும் நெசவாளா்களுக்கு பெற்றுத் தருவேன் என்றாா்.

இந்நிகழ்ச்சியின் போது ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலக்கோம்பை பகுதியை சோ்ந்த தே.மு.தி.க ஒன்றிய கவுன்சிலா் துரைமுருகன், தேக்கம்பட்டி தே.மு.தி.க கவுன்சிலா் பவானிமுருகன் ஆகியோா் அக்கட்சியில் இருந்து விலகி வேட்பாளா் ஏ.லோகிராஜன் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தனா்.

பிரசாரத்தில் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் டி.ஆா்.என். வரதராஜன், ஒன்றிய துணைச் செயலாளா் அமரேசன், மாவட்ட கவுன்சிலா் ஜி.கே. பாண்டியன், ஒன்றிய இளைஞரணி செயலாளா் பொன்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com