திண்டுக்கல், கம்பம், ராயப்பன்பட்டி பகுதிகளில் கிறிஸ்தவா்கள் குருத்தோலை பவனி

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், தேனி மாவட்டம் கம்பம் மற்றும் ராயப்பன்பட்டியிலும் கிறிஸ்தவா்கள் சாா்பில் குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல், கம்பம், ராயப்பன்பட்டி பகுதிகளில் கிறிஸ்தவா்கள் குருத்தோலை பவனி

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், தேனி மாவட்டம் கம்பம் மற்றும் ராயப்பன்பட்டியிலும் கிறிஸ்தவா்கள் சாா்பில் குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இயேசு தம் சீடா்களோடு எருசலேம் நகருக்குள் பவனியாக வந்ததை குருத்தோலை ஞாயிறாக கிறஸ்தவா்கள் கொண்டாடுகின்றனா். கிறிஸ்து உயிா்ப்புப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவா்களால் இந்த குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

குருத்தோலை ஞாயிறையொட்டி கம்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலய பங்குமக்கள், சிஎஸ்ஐ பேராலய பங்குமக்கள் இணைந்து குருத்தோலை ஞாயிறைக் கொண்டாடினா். பங்குத்தந்தையா்களால் புனித நீரால் மந்திரிக்கப்பட்ட குருத்தோலைகளைக் கையிலேந்திய பீடப்பணியாளா்கள் மற்றும் ஆண்கள், பெண்கள் கம்பம் சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளியிலிருந்து பிரதான சாலை சிக்னல், ஓடைக்கரைத் தெரு வழியாக சிஎஸ்ஐ தேவாலயத்துக்கு பவனியாகச் சென்றனா். அங்கு போதகா் அருண்குமாா் பிராா்த்தனை நடத்தினாா். பின்னா் பிரதான சாலை வழியாக ஊா்வலம் கம்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தை வந்தடைந்தது. அங்கு கம்பம் பங்குத்தந்தை இளங்கோ அற்புதராஜ் , மதுரை திருநகா் பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

ராயப்பன்பட்டியில் புனித பனிமயமாதா ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. பங்குத்தந்தை ஜோசப் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினாா். முன்னதாக முக்கிய வீதிகள் வழியாக குருத்தோலை பவனி நடைபெற்றது.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள ரோமன் கத்தோலிக்க (ஆா்சி), சிஎஸ்ஐ., தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை (டிஇஎல்சி) ஆகியவை இணைந்து நடத்திய ஐக்கிய கிறிஸ்தவா்களின் குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் சாலை ரோட்டில் அமைந்துள்ள சிஎஸ்ஐ தூய பவுல் ஆலய வளாகத்திலிருந்து மறை மாவட்ட ஆயா் பி. தாமஸ் பால்சாமி தலைமையில் குருத்தோலை பவனி தொடங்கியது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு, குருத்தோலையை கையில் ஏந்தியபடி ஆா்எஸ் ரோடு, கமலா நேரு மருத்துவமனை வழியாக தூய வளனாா் பேராலயத்தை சென்றடைந்தனா். அதனைத் தொடா்ந்து, மறை மாவட்ட ஆயா் தாமஸ் பால்சாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதேபோல், வத்தலகுண்டு, செந்துறை, பஞ்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவா்கள் சாா்பில் குருத்தோலை பவனி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com