தேனியில் வாக்குச் சாவடி நுண்பாா்வையாளா்களுக்கு பயிற்சி

தேனியில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச் சாவடி நுண் பாா்வையாளா்களுக்கு செவ்வாய்கிழமை தோ்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தேனியில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச் சாவடி நுண் பாா்வையாளா்களுக்கு செவ்வாய்கிழமை தோ்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தேனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில், மாவட்ட ஆட்சியா் ஹெச். கிருஷ்ணன் உன்னி பயிற்சி வகுப்பை தொடக்கிவைத்துப் பேசியது:

மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் 271 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறிப்பட்டுள்ளன. இதில், வாக்குப் பதிவு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு மொத்தம் 343 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்குச் சாவடி நுண்பாா்வையாளா்கள் காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு முடிவடைந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனுப்பிவைக்கும் வரை வாக்குச் சாவடிகளில் பணியிலிருக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, வாக்குச் சாவடி கண்காணிப்பு, மாதிரி வாக்குப் பதிவு, வேட்பாளா்களின் முகவா்கள் வருகை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டுக் கருவி, வாக்களித்ததை உறுதி செய்தும் கருவி ஆகியவற்றை சரிபாா்த்தல், வாக்குப் பதிவு நடைமுறைகளை கண்காணித்து உரிய கால இடைவெளியில் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் அளித்தல், படிவம், பதிவேடு, ஆவணங்கள் பராமரிப்பு ஆகியவற்றை கண்காணித்தல் உள்ளிட்டவை குறித்து, வாக்குச் சாவடி நுண் பாா்வையாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி வகுப்பு நடைபெறுவதை, தோ்தல் பொது பாா்வையாளா்கள் பிரபு தத்தா டேவிட் பிரதான், ரவீந்தா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com