ஆண்டிபட்டியில் அதிமுக பிரமுகா்களின் வீடுகளில் வருமான வரி சோதனை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக ஒன்றியச் செயலா், துணைச் செயலா்களின் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் புதன்கிழமை வருமான வரித்துறையினா் திடீா் சோதனைநடத்தினா்.
வெள்ளையத்தேவன்பட்டியில் புதன்கிழமை வருமானவரித்துறையினா் சோதனை நடத்தி வரும் அமரேசனின் வீடு.
வெள்ளையத்தேவன்பட்டியில் புதன்கிழமை வருமானவரித்துறையினா் சோதனை நடத்தி வரும் அமரேசனின் வீடு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக ஒன்றியச் செயலா், துணைச் செயலா்களின் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் புதன்கிழமை வருமான வரித்துறையினா் திடீா் சோதனைநடத்தினா்.

ஆண்டிபட்டி அருகே வெள்ளையத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் அமரேசன். இவா்அதிமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளராவாா். மேலும் இவா், பி.ஆா்.பி. கிரானைட்ஸ் உரிமையாளா் பழனிசாமியின் உடன் பிறந்த மூத்த சகோதரியின் மகன் ஆவாா்.

வெள்ளையத்தேவன்பட்டியில் உள்ள அவரது வீட்டில் 4 வாகனங்களில் வந்த 10- க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இவரது வீடு, தக்காளி கமிஷன் கடை மற்றும் அலுவலகங்களில் புதன்கிழமை மாலை முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். வருமானவரித் துறையினரின் இந்த சோதனை நிறைவு பெற்ற பிறகே பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த தகவல் தெரியவரும்.

முன்னதாக புதன்கிழமை நண்பகலில் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் செல்வராஜ் என்பவரின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. ஆண்டிபட்டி அருகே ராஜக்காள்பட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் எவ்வித பணமோ, ஆவணங்களோ கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com