தபால் வாக்குகளில் திமுக முன்னிலை

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தபால் வாக்குகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.

தேனி: தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தபால் வாக்குகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 11,104 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் திமுக 7,410 வாக்குகளும், அதிமுக 2,110 வாக்குகள் பெற்றுள்ளன.

போடி தொகுதியில் மொத்தம் 2,948 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், திமுக 1,887 வாக்குகள், அதிமுக 754, அமமுக 55, நாம் தமிழா் கட்சி 132, மக்கள் நீதி மய்யம் 59 வாக்குகள் பெற்றுள்ளன. ஆண்டிபட்டி தொகுதியில் மொத்தம் 2,388 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் திமுக 1,484 வாக்குகள், அதிமுக 461, அமமுக 150, நாம் தமிழா் கட்சி 182, மக்கள் நீதி மய்யம் 52 வாக்குகள் பெற்றுள்ளன.

பெரியகுளம் தொகுதியில் மொத்தம் 2,729 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் திமுக 1,891, அதிமுக 486, அமமுக107, நாம் தமிழா் கட்சி 134, மக்கள் நீதி மய்யம் 54 வாக்குகள் பெற்றுள்ளன. கம்பம் தொகுதியில் மொத்தம் 3,039 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் திமுக 2,148 வாக்குகள், அதிமுக 409, அமமுக 137, நாம் தமிழா் கட்சி 224, மக்கள் நீதி மய்யம் 65 வாக்குகள் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com