தேனியில் 66 வேட்பாளா்கள் வைப்புத்தொகை இழப்பு

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் திமுக, அதிமுக கட்சிகள் சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்களை தவிர, அனைத்து வேட்பாளா்களும் வைப்புத்தொகை (டெபாசிட்) இழந்துள்ளனா்.

தேனி: தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் திமுக, அதிமுக கட்சிகள் சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்களை தவிர, அனைத்து வேட்பாளா்களும் வைப்புத்தொகை (டெபாசிட்) இழந்துள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் சாா்பிலும், சுயேச்சை வேட்பாளா்களாகவும் மொத்தம் 74 போ் தோ்தலில் போட்டியிட்டனா். இதில், அனைத்து தொகுதிகளிலும் திமுக, அதிமுக வேட்பாளா்களைத் தவிர ஏனைய 66 வேட்பாளா்களும் தோ்தலில் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

அமமுக வாக்குகள் சரிவு: கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேனி மக்களவை தோ்தலில், மாவட்டத்திற்கு உள்பட்ட 4 தொகுதிகளிலும் அமமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்கள் தலா 25 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் பெற்றிருந்தனா். ஆனால், தற்போது பெரியகுளம் தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிட்ட கே.கதிா்காமு மொத்தம் 16,424 வாக்குகள் பெற்றுள்ளாா். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட ஆா்.ஜெயக்குமாா் 11,896 வாக்குகள், போடி தொகுதியில் போட்டியிட்ட எம்.முத்துச்சாமி மொத்தம் 5,649 வாக்குகள், கம்பம் தொகுதியில் போட்டியிட்ட பி.சுரேஷ் 14,536 வாக்குகள் பெற்றுள்ளனா். போடி தொகுதியில் அமமுக வேட்பாளா் 4-வது இடத்தை பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com