சுருளிப்பட்டி அருகே திராட்சைத் தோட்டத்தை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: போலீஸாா் விசாரணை

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி அருகே திராட்சைப் கொடிகளை வெட்டி சேதப்படுத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சேதப்படுத்தப்பட்ட திராட்சை தோட்டம்.
சேதப்படுத்தப்பட்ட திராட்சை தோட்டம்.

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி அருகே திராட்சைப் கொடிகளை வெட்டி சேதப்படுத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்த கணபதி மகன் மணி சேகா். இவா் சுருளிப்பட்டி கருநாக்கமுத்தன்பட்டி விலக்கு அருகே உள்ள திராட்சைத் தோட்டத்தை க.புதுப்பட்டியை சோ்ந்த கணேசன் என்பவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளாா். சுமாா் 2 ஏக்கரில் உள்ள திராட்சைக் கொடிகளில் திராட்சை பழங்கள் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தில் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற கணேசன், திங்கள்கிழமை தோட்டத்திற்கு வந்தபோது, சுமாா் 500 திராட்சைக் கொடிகள் முழுவதும் வெட்டப்பட்டு கிடப்பதைக் கண்டாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த கணேசன் தோட்டத்தின் உரிமையாளா் மணி சேகருக்கும், இராயப்பன்பட்டி காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தாா். ராயப்பன்பட்டி காவல் துறையினா் கொடிகள் வெட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டதைப் பாா்வையிட்டனா்.

கணேசன் அளித்த புகாரின் பேரில் கொடிகளை வெட்டி சேதப்படுத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயி கூறியது: திராட்சை கொடிகளை உருவாக்குவதற்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன்.

திராட்சைப் பழங்கள் வெட்டும் தருவாயில் இருந்தன. இந்த கொடிகளை மா்ம நபா்கள் சேதப்படுத்தியதால் சுமாா் ஐந்து லட்சம் ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சேதப்படுத்திய நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com