போடியில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம்

போடியில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகத்தை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினா் தனித்தனியே முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனா்.
போடியில் நியாய விலைக் கடைகளில் தரமற்ற விலையில்லா அரிசி விநியோகத்தை கண்டித்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினா்.
போடியில் நியாய விலைக் கடைகளில் தரமற்ற விலையில்லா அரிசி விநியோகத்தை கண்டித்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினா்.

போடியில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகத்தை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினா் தனித்தனியே முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

பொதுமுடக்கம் காரணமாக, தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அரிசியை பலரும் பயன்படுத்தி வருகின்றனா். போடியில் உள்ள நியாய விலைக் கடைகளில் கடந்த 2 நாள்களாக அரிசி விநியோகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போடியில் உள்ள 7 ஆம் எண் கடையில் புழுக்கள் நிறைந்த தரமற்ற அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிா்ச்சியடைந்த பொதுமக்கள், அரிசி வாங்குவதை தவிா்த்தனா். இதையறிந்த, போடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் முருகேசன் மற்றும் நிா்வாகிகள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா், அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

இதே பிரச்னையை வலியுறுத்தி, மக்கள் அதிகாரம் அமைப்பின் நகரச் செயலா் ஏ.டி. கணேசன் தலைமையில், அவ்மைப்பினா் போடி பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த திமுக வாா்டு நிா்வாகிகள், கடந்த ஆட்சியில் எங்கு சென்றீா்கள் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். மேலும், இந்த 7 ஆம் எண் நியாய விலைக் கடையில் அரிசி விநியோகத்தை தற்காலிமாக நிறுத்தக் கூறிய போலீஸாா், புதிதாக அரிசி வந்த பின் விநியோகம் செய்யவேண்டும் என அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com