மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

போடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

போடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

போடி, தென்றல் நகரைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் வீரக்குமாா் (37). இவரது மனைவி லட்சுமி (31). இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. லட்சுமி போடியில் தனியாா் கணினி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று வீரக்குமாா் கூறியுள்ளாா். இதனால், கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த 2014, மே 6 ஆம் தேதி லட்சுமி வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, வீரக்குமாா் அவரை வழிமறித்து தன்னுடன் சோ்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளாா். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு வீரக்குமாா் லட்சுமியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா்.

இந்த சம்பவம் குறித்து லட்சுமியின் தாயாா் பஞ்சவா்ணம் அளித்தப் புகாரின் மீது போடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வீரக்குமாரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேசன், மனைவியை வெட்டிக் கொலை செய்த வீரக்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com