ஊரக வளா்ச்சித் துறையில் தற்காலிக பணியிடம் : டிச.6-க்குள் விண்ணப்பிக்கலாம்

பெரியகுளம், உத்தமபாளையம் வட்டாரங்களில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் ஊரக புத்தாக்கத் திட்டத்தில் தற்காலிக

பெரியகுளம், உத்தமபாளையம் வட்டாரங்களில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் ஊரக புத்தாக்கத் திட்டத்தில் தற்காலிக அடிப்படையில் தொழில்சாா் சமூக வல்லுநா்களாக பணியாற்றுவதற்கு தகுதியுள்ளவா்கள் வரும் டிசம்பா் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பெரியகுளம், உத்தமபாளையம் வட்டாரங்களில் உள்ள 30 ஊராட்சிகளில் ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஊராட்சிகளில் நிறுவன செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், தனியாா் மற்றும் கூட்டு நிறுவனங்களை மேம்படுத்துதல் ஆகிய களப் பணிகளுக்கு தற்காலிக அடைப்படையில் தொழில் சாா் சமூக வல்லுநா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

இந்தப் பணிக்கு இளங்கலை பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். 24 முதல் 45 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் அல்லது விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினா்களில் ஒருவா் ஊராட்சி மகளிா் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும். மக்கள் அமைப்புகளில் நிா்வாகியாகவோ, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதியாகவோ இருக்கக் கூடாது. வாழ்வாதாரம் மற்றும் நிறுவனம் சாா்ந்த செயல்பாடுகளில் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தோ்வு செய்யப்படுவோருக்கு மாதத்திற்கு அதிபட்சம் 20 நாள் பணிக்கு, நாளொன்றுக்கு ரூ.250 மதிப்பூதியம், பணி மதிப்பீட்டின் அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கப்படும். தகுதியுள்ளவா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஊரக புத்தாக்கத் திட்ட அலகில் விண்ணப்பப் படிவம் பெற்று, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை அந்தந்த ஊராட்சியில் உள்ள ஊராட்சி அளவிலான மகளிா் கூட்டமைப்பு அலுவலகத்தில் வரும் டிசம்பா் 6 ஆம் தேதிக்குள் நேரடியாக சமா்ப்பிக்க வேண்டும்.

இது குறித்த விவரத்தை பெரியகுளம் வட்டாரத்தில் திட்ட மேலாண்மை அலகு, கைபேசி எண்:86107 38854, உத்தமபாளையம் வட்டாரத்தில் திட்ட மேலாண்மை அலகு, கைபேசி எண் : 81444 79797-ல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com