உத்தமபாளையம் புறவழிச்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் புறவழிச்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் புறவழிச்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம், கூடலூா் போன்ற பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.280.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக எவ்விதப் பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் பணிகள் அரைகுறையாக நடைபெற்ற நிலையில் உள்ளன. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

இது தமிழகம் - கேரளத்தை இணைக்கும் முக்கியச் சாலை என்பதால் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். தற்போது சபரிமலை சீசன் என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தா்கள் வந்து செல்கின்றனா். இதனால் அவா்கள் உத்தமபாளையம், சின்னமனூா் நகா் பகுதி வழியாக செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் புறவழிச்சாலைப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com