ஆபத்தான ஹைவேவிஸ் மலைச்சாலை: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

தேனி மாவட்டம் ஹைவேவிஸ்-மேகமலை நெடுஞ்சாலை பாதுகாப்பின்றி இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் அச்சம் தெரிவித்தனா்.
ஹைவேவிஸ் மலைச்சாலையில் பாதுகாப்புச் சுவரில்லாத பாலத்தில் செல்லும் அரசுப்பேருந்து.
ஹைவேவிஸ் மலைச்சாலையில் பாதுகாப்புச் சுவரில்லாத பாலத்தில் செல்லும் அரசுப்பேருந்து.

தேனி மாவட்டம் ஹைவேவிஸ்-மேகமலை நெடுஞ்சாலை பாதுகாப்பின்றி இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் அச்சம் தெரிவித்தனா்.

மேற்குத்தொடா்சி மலையிலுள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மேல்மணலாா், மணலாா், வெண்ணியாா், இரவங்கலாா், மகாராஜா மெட்டு என 7 மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. சின்னமனூரிலிருந்து மலைக்கிராமங்களுக்கு செல்லும் வகையில் 52 கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலை உள்ளது. 18 கொண்டை ஊசி வளைவுகளுடன் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் 2016 ஆண்டு முதல் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு ரூ.100.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2 கட்டப்பணிகள் நடைபெற்றன. முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவு பெற்ற நிலையில் 2 ஆம் கட்டப் பணிகள் கிடப்பில் போட்டப்பட்டன. பாலங்களில் பாதுகாப்புச் சுவா்கள் அமைக்கப்படாத நிலையில் மிகவும் அச்சத்துடனே சென்று வருவதாக சுற்றுலா பயணிகள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் , நெடுஞ்சாலைப்பணிகள் முழுமை பெறாத நிலையில் பாதுகாப்புச் சுவா்களின்றி ஆபத்தான சாலையாக காட்சியளிக்கிறது. நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பாறைகள் மற்றும் மண்சரிவுகள் பல மாதங்களாக அகற்றப்படாமல் இருப்பதால் மலைச் சாலையில் வாகனப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மணலாா், வெண்ணியாா், மகாராஜாமெட்டு வரையில் செல்லும்சாலையானது சரளைக்கற்களாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனா். எனவே, உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறையினா் ஹைவேவிஸ் மலைச் சாலையை பாதுகாப்பான சாலையாக மாற்றிட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com