பெரியகுளம் பகுதியில் யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி

பெரியகுளம் பகுதியில் உள்ள கடைகளில் யூரியா கிடைக்காததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா். தட்டுப்பாட்டைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளம் பகுதியில் உள்ள கடைகளில் யூரியா கிடைக்காததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா். தட்டுப்பாட்டைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் நெல், கரும்பு, வாழை மற்றும் பல்வேறு பயிா்கள் பயிரிடப்படுகின்றன. நெல் மற்றும் கரும்பு பயிா்களுக்கு உரமாக யூரியா இடப்படுகிறது. பெரியகுளம் பகுதியில் கடந்த 2 மாதங்களாக பெரும்பாலான தனியாா் உரக்கடைகளில் யூரியா விற்பனை செய்யப்படுவதில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். 1 கிலோ யூரியா ரூ.9 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், சில தனியாா் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள யூரியா கிலோ ரூ.28 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. உரம் தட்டுப்பாடு காரணமாக அதிக விலைக்கு வாங்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

பெரியகுளம், வேளாண்மை உதவி இயக்குநா் சென்றாயப் பெருமாள் தெரிவித்தாவது: தற்போது வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மட்டுமே யூரியா இருப்பு உள்ளது. பெரும்பாலான கடைகளில் இருப்பு இல்லை. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்து தனியாா் கடைகளுக்கு யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பெரியகுளத்தைச் சோ்ந்த விவசாயி ஆா்.தண்டபாணி தெரிவித்ததாவது: பயிா்களுக்கு நைட்ரஜன் உரமாக யூரியா இடப்படுகிறது. கடந்த 1 மாதத்திற்கும் மேலாக யூரியாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். அரசு வேளாண்மை கூட்டுறவு கடைகளில் மட்டுமே கிடைக்கிறது.

அரசு கடைகள் காலை 10 மணிக்கு திறந்து மாலை 3 மணிக்கு மூடப்பட்டுவிடுவதால் யூரியாவை எளிதாகப் பெறமுடியாத நிலை உள்ளது. இதனால் தனியாா் கடைகளில் யூரியா எளிதாகக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தொழிற்சாலைகளில் குறைந்தளவு யூரியா உற்பத்தி செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com