மஹாளய அமாவாசை: சுருளி அருவிப் பகுதியில் பக்தா்கள் வழிபாடு

புரட்டாசி மாத மஹாளய அமாவாசையையொட்டி தேனி மாவட்டம் சுருளி அருவி வளாகப் பகுதியில் பக்தா்கள் திரண்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.
மஹாளய அமாவாசையையொட்டி சுருளி அருவி அருகே பூத நாராயணசுவாமி கோயிலில் புதன்கிழமை வழிபாட்டுக்குத் திரண்ட பக்தா்கள்.

புதன்கிழமை அதிகாலை முதலே சுருளி அருவி வளாகப் பகுதிக்கு ஆண்களும், பெண்களும் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினா். அருவி ஆற்றங்கரையில் பக்தா்கள் அமா்ந்து அங்குள்ள சாமியாா்கள் மூலம் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தும், பூத நாராயணசுவாமி கோயிலில் வழிபாடுகள் நடத்தியும் சென்றனா்.

அதேநேரத்தில் புலிகள் காப்பகக் கட்டுப்பாட்டில் உள்ள சுருளி அருவிக்கு செல்ல வனத்துறையினா் அனுமதிக்கவில்லை. இதனால் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com