முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
போடியில் நாளை மின்தடை
By DIN | Published On : 11th October 2021 12:01 AM | Last Updated : 11th October 2021 12:01 AM | அ+அ அ- |

போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.12) மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் சொ.லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
எனவே, செவ்வாய்க்கிழமை (அக்.12) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போடி, போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.