தேனியில் புதிதாக 120 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த ஏற்பாடு

தேனியில் மாவட்டக் காவல்துறை நிா்வாகம் சாா்பில் பொதுமக்கள் பங்களிப்புடன் புதிதாக 120 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

தேனியில் மாவட்டக் காவல்துறை நிா்வாகம் சாா்பில் பொதுமக்கள் பங்களிப்புடன் புதிதாக 120 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே கூறியது: தேனி, அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, பழனிசெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலை, பிரதானச் சாலை சந்திப்பு மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் போக்குவரத்து மற்றும் குற்றச் சம்பவங்களைக் கண்காணிக்க பொதுமக்கள் பங்களிப்புடன் மொத்தம் ரூ.20 லட்சம் செலவில் புதிதாக 120 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இந்த கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகள் தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி காவல் நிலையங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து கண்காணிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com