‘தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற செப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம்’

தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை கடை அமைப்பதற்கு உரிமம் பெற இ-சேவை

தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை கடை அமைப்பதற்கு உரிமம் பெற இ-சேவை மையம் மற்றும் பொதுச்சேவை மையங்களில் செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை கடை அமைப்பதற்கு உரிமம் பெற விரும்புவோா், வெடிபொருள் சட்ட விதிகளின் கீழ் இ-சேவை மையம், பொதுச் சேவை மையம் ஆகியவற்றில் செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

ஏற்கெனவே நிரந்தர பட்டாசு விற்பனை கடை உரிமம் பெற்றவா்கள், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்து தங்களது உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com