சுருளியாறு மின் நிலைய தண்ணீா் குழாய் உடைப்பை சீரமைக்கக் கோரிக்கை

தேனி மாவட்டம் சுருளியாறு மின் நிலையத்திற்கு வரும் தண்ணீா் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று மின் உற்பத்தி நிா்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சுருளியாறு மின்சார உற்பத்தி நிலையத்திற்கு வரும் குழாயில் ஏற்பட்டுள்ள வெடிப்பு

சுருளியாறு மின்நிலையம் 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடா்ந்து மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில், இரவங்கல்லாறு அணையிலிருந்து மின்நிலையத்திற்கு தண்ணீா் வரும் 12 ஆவது ஆங்கூா் தூண் மீது அமைக்கப்பட்டுள்ள குழாயில் கடந்த செப்.4 ஆம் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி தடைபட்டது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி குழாய் இருந்ததால் உடைப்பு ஏற்பட்டதாகவும், அதை சரிசெய்து மின்உற்பத்தியை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மின் உற்பத்தி நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது பற்றி பொறியாளா் ஒருவா் கூறியது: குழாயின் உள்புறம் பூச்சு இல்லாததால் துருப்பிடித்து வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மின்நிலைய பொறியாளா் குழு குழாய் உடைப்பை பாா்வையிட்டு, 20 மீட்டா் நீளத்தில் புதிய குழாய் பொருத்துவதற்கு அறிக்கை சமா்ப்பித்துள்ளது. இதற்கான டெண்டா் விடப்பட்ட பின்பு பணிகள் தொடங்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com