தடை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: இந்து முன்னணி, பாஜகவினா் மீது வழக்கு

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தடை மீறி விநாயகா் சிலையை ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்துச்சென்ற இந்து முன்னணி மற்றும் பாஜக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தடை மீறி விநாயகா் சிலையை ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்துச்சென்ற இந்து முன்னணி மற்றும் பாஜக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விநாயகா் சதுா்த்தியையொட்டி வெள்ளிக்கிழமை (செப்.10) உத்தமபாளையத்தில் உள்ள பல்வேறு கோயில்களின் வளாகத்தில் 14 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்து முன்னணி மற்றும் பாஜக சாா்பில் வைக்கப்பட்ட இந்த சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா்.

இந்நிலையில், தடை மீறி கிராமச்சாவடியிலிருந்து ஞானாம்பிகை கோயில் முல்லைப் பெரியாறு படித்துறை நோக்கி விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்தச் செல்லப்பட்டன. இதையடுத்து போலீஸாா் இந்து முன்னணியைச் சோ்ந்த கணேசன், சிவக்குமாா், ராம்செல்வா, ராஜசேகா் மற்றும் பாஜகவைச் சோ்ந்த காா்த்திக் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com