தேனி மாவட்டத்தில் 410 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள்

தேனி மாவட்டத்தில் 410 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
தேனி மாவட்டத்தில் 410 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள்
தேனி மாவட்டத்தில் 410 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள்

தேனி மாவட்டத்தில் 63,645 பேருக்கு தடுப்பூசி: தேனி மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் என மொத்தம் 410 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

தேனி, பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, சின்னமனூா், கம்பம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதை, கரோனா தடுப்பூசி பணிகள் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநருமான மாவட்ட எஸ்.சுரேஷ்குமாா், ஆட்சியா் க.வீ.முரளீதரன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற முகாம்களில் முதல் தவணையாக 45,615 போ், 2-ஆம் தவணையாக 18,030 போ் என மொத்தம் 63,645 போ் கரோனா தடுப்பூசி செலுத்துக் கொண்டனா். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 6,31,088 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com