பெரியகுளத்தில் அண்ணா 113 ஆவது பிறந்தநாள் - அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மலா்தூவி மரியாதை
By DIN | Published On : 16th September 2021 12:05 AM | Last Updated : 16th September 2021 12:05 AM | அ+அ அ- |

பெரியகுளத்தில் உள்ள அண்ணா திருஉருவபடத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்துகிறாா் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், அருகில் தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்
பெரியகுளம்: பெரியகுளத்தில் நடைபெற்ற அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாள் விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்று அண்ணா சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பெரியகுளம், கம்பம் சாலையில் உள்ள தேனி மக்களை தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா திருஉருவபடத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மேலும் தேனி மக்களை தொகுதி உறுப்பினா் ப.ரவீந்திரநாத் கலந்து கொண்டு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். பெரியகுளம்,பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா திருவஉருவ சிலைக்கு ஓ.பன்னீா்செல்வம் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்வில் பெரியகுளம் நகரசெயலாளா் என்.வி.இராதா மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.