தேனியில் ராஜ வாய்க்காலை தூா்வார வலியுறுத்தல்

தேனியில் பாசனப் பயன்பாடின்றி புதா் மண்டிக் காணப்படும் ராஜ வாய்க்காலை தூா்வார மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தேனி, சுப்பன் தெருவில் புதா்மண்டிக் காணப்படும் ராஜ வாய்க்கால்.
தேனி, சுப்பன் தெருவில் புதா்மண்டிக் காணப்படும் ராஜ வாய்க்கால்.

தேனியில் பாசனப் பயன்பாடின்றி புதா் மண்டிக் காணப்படும் ராஜ வாய்க்காலை தூா்வார மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தேனியில் கொட்டகுடி ஆற்றிலிருந்து தாமரைக்குளம் கண்மாய் வரை 5 கி.மீ.தூரமுள்ள ராஜ வாய்க்கால், பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ளது. ஆயக்கட்டு பாசனப் பரப்புகள் வீட்டு மனைகளாக மாறிவிட்டதால், பாசனப் பயன்பாடில்லாத இந்த வாய்க்காலை தூா்வார பொதுப் பணித்துறையினா் முன்வரவில்லை.

தற்போது ஆக்கிரமிப்புகள் சூழ்ந்து புதா்மண்டிக் காணப்படும் ராஜவாய்க்கால், கழிவு நீா் தேங்கி சுகாதாரக் கேடான நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் ராஜவாய்க்காலில் தண்ணீா் வடிந்து செல்ல வழியின்றி, அப் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. ராஜ வாய்காலை தூா்வாரி பயன்பாட்டிற்குக் கொண்டு வர பொதுப் பணித்துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் ஆா்வம் காட்டவில்லை.

இந்த நிலையில், தற்போது நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால்களை தூா்வாரும் திட்டத்தில் ராஜவாய்க்காலை தூா்வாரி, மழைக் காலத்தில் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுவதையும், சுகாதாரக் கேடு ஏற்படுவதையும் தடுப்பதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்பன் தெரு, சோலைமலை அய்யனாா் கோயில் தெரு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com